குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடகொரியாவை தனிமைப்படுத்தும் முனைப்புக்களில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. வடகொரியா மீது மேலும் தடைகள் விதிக்கப்பட வேண்டுமென அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் தடை மற்றும் கப்பல்களை சோதனையிடுதல் உள்ளிட்டன இந்த யோசனையில் முன்மொழியப்பட்டுள்ளன.
வடகொரியா மீது மேலும் தடைகளை விதிப்பது குறித்து வரைவுத் திட்டமொன்றை முன்வைத்து அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமெனவும் அமெரிக்கா கோரியுள்ளது. குறிப்பாக வடகொரிய கப்பல்களை ஐக்கிய நாடுகள் அமைப்பில் உறுப்புரிமை வகிக்கும் நாடுகள் சோதனையிடக்கூடிய வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.