மியன்மாரின் ராகினே மாகாணத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களின் போராட்டக்குழு அமைப்பு அறிவித்த ஒருதலைப்பட்ச ஒரு மாத கால போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மியான்மர் அரசாங்கம் மறுத்துள்ளது. போர் நிறுத்தத்தை அறிவித்த ரோஹிங்கியா முஸ்லிம்களின் போராட்டக்குழு அமைப்பு மியான்மார் இராணுவமும் தங்கள் ஆயுதங்களை கைவிட வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர்
எனினும் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என என மியன்மார் அரச செய்தி தொடர்பாளர் ஜாவ் ஹாட்டே தெரிவித்துள்ளார்.
மியான்மாரில் போராட்டக்குழுவினர் ஒரு மாத போர்நிறுத்தம் அறிவிப்பு
Sep 10, 2017 @ 07:13
மியான்மாரில் அரசாங்கத்திற்கெதிராகவும் அந்நாட்டு ராணுவத்துக்கெதிராகவும் போராடி வரும் ரோஹிங்கியா முஸ்லிம்களின் போராட்டக்குழு அமைப்பு ஒருமாத காலம் போர்நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.
மியன்மாரின் ராகினே மாகாணத்தில் பங்களாதேசை பூர்விகமாகக் கொண்ட சுமார் 11 லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் மீது நீண்டகாலமாக மியான்மார் பாதுகாப்பு படைகளும், சில பௌத்த மத குழுக்களும் பல்வேறு சித்ரவதைகளுகளையும் தாக்குதல்களையும் மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக ரோஹிங்யா போராளிகள் என்ற அமைப்பு போராடி வருகின்றது. இந்த போராளிகள் குழு கலவரங்களை தூண்டுவதாகவும், கிராம தலைவர்கள், அரசு புலனாய்வாளர்கள் ஆகியோரை கொல்வதாகவும், அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்தநிலையில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் ரோஹிங்யா முஸ்லிம் போராளிகளுக்கும், மியன்மார் ராணுவத்துக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளதனை தொடர்ந்து சுமார் 3 லட்சம் முஸ்லிம்கள் பங்களாதேசுக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.
மேலும் மோதல்கள் மற்றும் ராணுவத்தினரினரின் தாக்குதல்கள் காரணமாக பல்லாயிரக்கணக்கான ரோஹிங்கியா இனத்தவர்கள் உயரிழந்துள்ள நிலையில், போராட்டக்குழுவினர் ஒருமாதம் போர்நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
மனிதாபிமானத்தை கணக்கில் கொண்டு இந்த போர்நிறுத்தம் மேற்கொண்டுள்ளதாகவும், மியான்மர் ராணுவம் மனிதாபிமான ரீதியில் இதை அணுக வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.