Home இலங்கைகிளிநொச்சி கடையில் ஏற்பட்ட தீயினால் குழந்தை பலி தந்தை காயம் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

கிளிநொச்சி கடையில் ஏற்பட்ட தீயினால் குழந்தை பலி தந்தை காயம் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

by admin

கிளிநொச்சி புன்னைநீராவி கண்ணகிபுரம் பகுதியில் நேற்று இரவு கடை ஒன்றில் ஏற்பட்ட தீ சம்பவத்தில்இ ரண்டரை வயது றமேஸ்குமார் சுஜித் என்ற குழந்தை உயிரிழந்ததுடன், குழந்தையின் தந்தை படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மூவர் கொண்ட குழு வர்த்தக நிலையத்தின் மீது பெற்றோல் விசிறி தீவைத்ததாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மற்றும் கிளிநொச்சி குற்றத் தடகவியல் பொலிசார் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த கடையில் இருந்த கண்காணிப்புக் கருவி என்பவற்றையும் தர்மபுரம் பொலிசார் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது அதில் எவ்வாறு தீ ஏற்ப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் இருக்கலாம் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More