கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போது காஷ்மீர் பள்ளத்தாக்கின் நிலை முன்னேறியுள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஸ்ரீநகருக்கு இன்று மேற்கொண்ட பயணத்தின் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்குள் தீவிரவாதிகளின் ஊடுருவலை நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்த இந்திய மத்திய அமைச்சர் இதுகுறித்து யாரிடம் வேண்டுமானாலும் பேசத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். காஷ்மீரின் பிரச்சினைகளைத் தீர்க்க உதவ முன்வருபவர்கள் அனைவரையும் இதற்காக அழைப்பதாக பேசிய அவர் காஷ்மீரின் பிரச்சினைகள் தொடர்பாக கருணை, தொலைதொடர்பு, சக வாழ்வு, நம்பிக்கை ஏற்படுத்தல், நிலைத்தன்மை ஆகிய ஐந்து விஷயங்கள் முக்கியமானவை எனவும் தெரிவித்தார்.