Home இலங்கைஇலங்கையுடனான உறவுகளில் உள்நோக்கம் கிடையாது – சீனா

இலங்கையுடனான உறவுகளில் உள்நோக்கம் கிடையாது – சீனா

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கையுடனான உறவுகளில் உள்நோக்கம் கிடையாது என சீனா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சீன தூதரகம் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது. சீனா இலங்கையின் மிக நெருங்கிய நண்பன் என இலங்கைக்கான சீனத்தூதுவர்  ஜி சியான்லியங் (  Yi Xianliang)  தெரிவித்துள்ளார். சீனா இலங்கைக்கு உதவிகளை வழங்கும்  போது எவ்வித நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனா எல்லா சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருவதாகத் தெரிவித்துள்ள அவர் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு குறித்து சில நாடுகள் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என   குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More