குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.
உலகை உலுக்கிய செப்டம்பர் 11 தாக்குதல்கள் இடம்பெற்று 16 வது வருட பூர்த்தியை அமெரிக்கா நினைவுகூர்ந்துள்ள அதேவேளை ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்காவை சோதித்துப்பார்க்க நினைப்பவர்களிற்கு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
வெள்ளை மாளிகையிலும் பின்னர் பென்டகனிலும் இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்ட அவர் ஓரு நிமிட மௌன அஞ்சலியை செலுத்தியுள்ளார்.
பின்னர் பென்டகனிற்கு வெளியே இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர் அமெரிக்காவை சோதித்து பார்க்க நினைப்பவர்களிற்கு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். எமது விழுமியங்கள் என்றும் நீடித்து நிலைக்கும்
எமது நாடு வெற்றிபெறும் எங்கள் நேசத்திற்குரியவர்களி;ன் நினைவுகள் என்றும் அழியாது என டிரம்ப் தெரிவித்துள்ளார். எங்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகள் அச்சத்தை ஏற்படுத்தி எங்கள் உணர்வுகளை பலமிழக்கச்செய்யலாம் என கருதினர் என தெரிவித்துள்ள டிரம்ப் அமெரிக்காவிற்கு எதிரான இந்த முயற்சியை எதிர்காலத்தில் மேற்கொள்பவர்கள் எங்களின் உண்மையான இயல்பை குணாதியசயத்தை சோதித்துபார்க்க முயன்று காணமல்போனவர்களின் பட்டியலில் விரைவில் சேருவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.