குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் தரப்பினர் நடத்திய விசாரணைகள், ட்ராம்பிற்கே ஆபத்தாக அமையக் கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு டொனால்ட் டராம்பின் தேர்தல் பிரச்சாரத்தை இழிவுபடுத்தும் நோக்கிலேயே ஒபாமா நிர்வாகம் ரஸ்யாவுடன் ட்ராம்ப் தொடர்பு பேணினார் என குற்றம் சுமத்தியது என்ற அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தன.
எனினும் இந்த விசாரணைகள் ஜனாதிபதி ட்ராம்ப் தரப்பிற்கு பாதகமான அடிப்படையில் அமைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. ஒபாமா தரப்பினர் தவறாக நடந்து கொண்டமைக்கு எவ்வித ஆதாரங்களும் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.
எனினும், ட்ராம்பின் ஆதரவாளர்கள் அரசியல் சாசனத்தை மீறி வெளிநாட்டு அரசாங்கங்களுடன் தொடர்புகளைப் பேணியமைக்கான சாட்சியங்கள் உண்டு என தெரிவிக்கப்படுகிறது.