இமய மலையை அண்மித்துள்ள உத்தரகாண்ட மாநிலத்தின் உத்தரகாசி பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக பல பகுதிகளில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. உத்தர்காசி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இன்று காலை உத்தர்காசி பகுதிகளில் உள்ள மலைக்குன்றுகளில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதனால், அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. அங்குள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் பெரும்பாலும் மலைப்பாங்கான பிரதேசம் என்பதால் நிலச்சரிவு அடிக்கடி நடைபெறுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிலச்சரிவு விபத்தில் பலர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.