குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறும் தனது முடிவிற்காக பிரித்தானியா கவலைப்படும் நாள் விரைவில் வரும் என ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஜீன்குளோட் ஜங்கர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா வெளியேறுவது ஐரோப்பிய ஓன்றியத்திற்கு துயரம்மிகுந்த தருணமாக அமையும் எனினும் ஐரோப்பிய ஓன்றியம் அதனையும் தாண்டி நடைபோடவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது ஓன்றியத்தின் எதிர்காலம் அல்ல எனவும் இது முடிவும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறிய மறுதினமான 2019 மார்ச் 30 ம் திகதி ஐரோப்பிய ஓன்றிய உச்சிமாநாட்டை நடத்தவேண்டும் எனவும் அந்த மாநாட்டில் ஐரோப்பிய ஓன்றியத்தின் எதிர்காலம் குறித்து ஆராயவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஐரோப்பியஓன்றிய நாடுகள் மத்தியில் பொருளாதார பாதுகாப்பு ஓத்துழைப்புகளை அதிகரிக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரிந்து செல்வதற்கான பிரித்தானிய மக்களின் விருப்பத்தை தான் மதிக்கின்றேன் என தெரிவித்துள்ள ஜங்கர் பிரித்தானியா வெளியேறுவது எங்கள் வரலாற்றில் மிகவும் துயரமான தருணமாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்