தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு எதிர்வரும் செப்ரம்பர் 20ம் திகதி வரை உயர்நீதிமன்றம் விதித்துள்ளது.
எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை விலக்கிக்கொண்ட தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபையில் தமிழக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதேவேளை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் தனியாக மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்தநிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் எதிர்வரும் திங்கட்கிழமை சென்னை வர உள்ளதாக அரசு தலைமை சட்டத்தரணி தெரிவித்ததனையடுத்து இருதரப்பு கோரிக்கையையும் ஏற்றுக் கொண்ட நீதிபதி, சட்டமன்றத்தில் செப்ரம்பர் 20ம் திகதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.