Home இலங்கைமைத்திரியின் மகளின் ‘ஜனாதிபதி அப்பா’ நூல் வெளியிடப்பட்டுள்ளது

மைத்திரியின் மகளின் ‘ஜனாதிபதி அப்பா’ நூல் வெளியிடப்பட்டுள்ளது

by admin


மிகவும் எளிமையான விவசாய குடும்பத்தில் பிறந்த ஒரு மனிதர் நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட   கதையை அவரது மகளின் பார்வையால் கூறும் ‘ஜனாதிபதி அப்பா’ நூல் வெளியீட்டு விழா இன்று (15) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி     மைத்ரிபால சிறிசேன   தலைமையில் நடைபெற்றது.

தனது தந்தையார் பிரதேச அரசியல்வாதியாக அரசியல் வாழ்வை ஆரம்பித்து, ஜனாதிபதி பதவி வரையான முன்னேற்ற பயணத்தை மேற்கொண்டபோது அவரது மூத்த மகளாக சத்துரிக்கா சிறிசேன பெற்ற அனுபவங்களைப்பற்றி இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பதவி வகிக்கும் தனது தந்தை தொடர்பில் மகளால் எழுதப்பட்ட முதலாவது வாழ்க்கைச் சரிதமாக இந்த நூல் வரலாற்றில் இடம்பெறுகிறது.   நூலின் முதற் பிரதி சத்துரிக்கா சிறிசேனவினால் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன மற்றும் ஜயந்தி சிறிசேன ஆகியோரிடம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More