குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரியாவின் ஒர் பகுதியை யுத்த நிறுத்த வலயமாக அறிவிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது. துருக்கி, ரஸ்யா, ஈரான் ஆகிய நாடுகள் இவ்வாறு சிரியாவின் இட்லிப் பகுதியில் யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்துவதற்கு இணங்கியுள்ளன. யுத்த நிறுத்த உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பில் கஸகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
சிரிய அரசாங்கத் தரப்பு, ரஸ்யா, ஈரான் மற்றும் துருக்கி ஆகியன இந்தப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றுள்ளன. சிரியாவில் இடம்பெற்று வரும் யுத்தம் காரணமாக இதுவரையில் 3 லட்சத்து 30 ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் யுத்தம் காரணமாக பல மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்து செல்ல நேரிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது