குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நியூயோர்க் காவல்துறையினரும் ஏனைய பாதுகாப்பு தரப்பினரும், நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் தலைமைக் காரியாலயத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் இந்தக் கூட்டத்தில் உரையாற்ற உள்ள காரணத்தினால், விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உலகின் முக்கிய தலைவர்கள், உயர் மட்ட ராஜதந்திரிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியஸ்தர்கள் இந்தக் கூட்டத் தொடரில் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்ட அமர்வுகள் ஆரம்பாக உள்ளது. இந்த பொதுச் சபைக் கூட்டத்தின் போது ட்ராம்பிற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.