குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காணாமல் போனோர் குறித்த சட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்கக் கூடாது என கூட்டு எதிர்க்கட்சியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளனர். அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரில் சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் தினேஸ் குணவர்தன, டலஸ் அழப்பெரும, பந்துல குணவர்தன, திஸ்ஸ விதாரண மற்றும் ஜயந்த சமரவீர ஆகியோர் இவ்வாறு ஜனாதிபதியை சந்தித்துள்ளனர். இந்த சட்டமானது பாராளுமன்றில் சமர்ப்பித்தால் அது பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என கூட்டு எதிர்க்கட்சியினர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி சாதகமான பதிலை அளிப்பார் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.