Home இந்தியாபாதுகாப்பு, வெளியுறவுத்துறை பெண்கள் வசம் – இந்திய மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன்

பாதுகாப்பு, வெளியுறவுத்துறை பெண்கள் வசம் – இந்திய மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன்

by admin

இந்தியாவின் முக்கிய அரசுப் பொறுப்புகளான பாதுகாப்புத் துறை மற்றும் வெளியுறவுத்துறை பெண்கள் வசமே உள்ளதாக இந்திய மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் பெருமிதம் தெரிவித்துள்ளார். நாட்டில் சமூகம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் மாற்றங்களை கொண்டுவரும் வல்லமை பெண்களிடம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு காலத்தில் பெண்கள் என்றாலே வீட்டையும், குழந்தைகளையும் பராமரிக்க வேண்டியவர்கள் என்று இருந்த நிலை மாறி, பெண்கள் இல்லாத துறைகளே இல்லை என்ற நிலை வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். உதாரணமாக நமது நாட்டின் முக்கிய அரசுப் பொறுப்புகளான பாதுகாப்புத் துறை மற்றும் வெளியுறவுத்துறை பெண்கள் வசமே உள்ளதாக சுமித்ரா மகாஜன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More