குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரொகிங்யா நெருக்கடி குறித்த தனது மௌனத்தை கலைத்துள்ள ஆன்சாங் சூகி தனது நாடு சர்வதேச சமூகத்தின் எந்த விசாரணை குறித்தும் அச்சம்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார். மியன்மார் மக்களிற்கு ஆற்றிய உரையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உலகத்தின் கவனம் தற்போது ரொகிங்யா இனத்தவர்களின் பக்கம் திரும்பியுள்ளது என்பது எனக்கு தெரியும், சர்வதேச சமூகத்தின் கௌரவத்திற்குரிய உறுப்பினர் என்ற அடிப்படையில் நாங்கள் எந்த சர்வதேச விசாரணை குறித்தும் அச்சம்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பரஸ்பர குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன, இந்த குற்றச்சாட்டுகள் குறித்த வலுவான ஆதாரங்கள் உள்ளன என உறுதிப்படுத்திய பின்னரே நாங்கள் விசாரணைகளை ஆரம்பிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 5 ம் திகதிக்கு பின்னர் முஸ்லீம் சிறுபான்மை இனத்தவர்களிற்கு எதிராக எந்த நடவடிக்கையும் இடம்பெறவில்லை எனவும் தேடுதல் நடவடிக்ககையும் இடம்பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த உரையில் தனது நாட்டின் ராணுவத்தினரை ஆங் சாங்சூகி கண்டிக்க தவறியுள்ளார்.