மெக்சிகோவில்; ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 250 க்கும் மேலாக அதிகரித்துள்ளதாக nதெரிவிக்கப்படுகின்றது. இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் சிக்கியுள்ள உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
தலைநகர் மெக்சிகோ சிட்டியில் மட்டும் 117 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. முன்னர் கோபுரங்களாக தலைநிமிர்ந்து நின்று, தற்போது மண்மேடாக காணப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான கட்டிட இடிபாடுகளுக்குள் இன்னும் ஆயிரக்கணக்கான உடல்கள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இணைப்பு 2 -மெக்சிக்கோ நிலநடுக்கத்தில் 119 பேர் உயிரிழப்பு – 30 லட்சம் பேர் பாதிப்பு
Sep 20, 2017 @ 02:57
மெக்சிக்கோவில் நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் ந்துள்ளதாக தகவல்கள் nவியாகியுளளன.
ரிக்ரர் அளவில் 7.1 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தில் மேலும் பலர் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய மெக்சிகோ பகுதியில் உள்ள மெக்சிகோ சிட்டி, மொர்லோஸ், ப்யூப்லா மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இடிபாடுகளுக்கிடையே பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மின்சாரம், தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால் 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1985-ம் ஆண்டு அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது உயிரிழந்த 10 ஆயிரம் பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இடம்பெற்று சில மணிநேரங்களிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்ப்ட:டள்ளமை குறிப்பிடத்தக்கது.
மெக்சிகோவில் கடுமையான நிலநடுக்கம் – இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளனர்.
Sep 19, 2017 @ 20:47
மெக்சிக்கோவின் தென்பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. செவ்வாயக்கிழமை ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்ரர் அளவில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கம் காரணமாக பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டிடங்கள் பல அடுக்குமாடிகள் குலுங்கியதாகவும் இதனால் அச்சமடைந்த மக்கள் வீதிகளில தஞ்சமடைந்ததாவும் தெரிவிக்கப்படுகின்றது.