குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடகொரியாவை முழுமையாக அமெரிக்கா அழிக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் தெரிவித்துள்ளார். வடகொரியா அணுவாயுத சவால்களை விடுப்பதனை தவிர்த்து கொள்ளாவிட்டால் கடுமையான அழிவுகளை சந்திக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரொக்கட் மனிதன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொன் உல்லை, ட்ராம்ப் விமர்சனம் செய்துள்ளார். வடகொரியா தன்னைத் திருத்திக் கொள்ளத் தவறினால் வடகொரியாவை முழுமையாக அழிப்பதனைத் தவிர வேறு வழியில்லை என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விமர்சனங்கள் குறித்து வடகொரியா இதுவரையில் எவ்வித பதில்களையும் அளிக்கவில்லை. இதேவேளை, கியூபாவின் நடவடிக்கைகளையும் ஜனாதிபதி ட்ராம்ப் விமர்சனம் செய்துள்ளார்.