குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கனடாவில் போலி செய்திகளை கண்டறிவது குறித்து கூகுள் நிறுவனம் விளக்கம் அளிக்க உள்ளது. எவ்வாறு போலி செய்திகளை கண்டறிவது எவ்வாறான செய்திகள் நம்பகமானவை என்பது குறித்து இளைஞர் யுவதிகளுக்கு கூகுள் நிறுவனம் விளக்கம் அளிக்க உள்ளது.
தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் கனடாவில் இந்த தி;ட்டத்தை கூகுள் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இந்த புதிய திட்டம் இளைஞர் யுவதிகளுக்கு மத்தியில் ஊடக அறிவினை மேம்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த முயற்சியானது வரவேற்கப்பட வேண்டியது எனவும் இந்த முயற்சியினால் அனைத்து பிரச்சினையும் தீர்வு காண முடியாது எனவும் சில நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
போலி செய்திகளை கண்டறிவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்காக கூகுள் நிறுவனம் 500,000 டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது. இணைய தளத்தில் போலி செய்திகள், பிழையான தகவல்களை எவ்வாறு கண்டறிந்து கொள்வது என்பது தொடர்பிலே விளக்கம் அளிக்கப்பட உள்ளது.