170
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் நாடளாவிய ரீதியில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவன சேவை சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக செயலிழந்து காணப்பட்டது. இலங்கையில் உள்ள டயலொக் எனும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவன சேவை இன்று மாலை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அலைவரிசை (கவரேஜ்) இல்லாமல் செயலிழந்து காணப்பட்டது.
அதனால் குறித்த தொலைத்தொடர்பு நிறுவன சேவைகளை பெற்றுக்கொண்டவர்களின் கைத்தொலைபேசிகள் செயலிழந்து காணப்பட்டன.
அதனால் பாவனையாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளானர்கள். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் தடைப்பட்ட சேவைகள் வழமைக்கு திரும்பின.
Spread the love