186
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பீட்டர் சகான் தொடர்ச்சியாக மூன்று சைக்கிளோட்டப் போட்டிகளில் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். ஸ்லோவாக்கியாவைச் சேர்ந்த 27 வயதான சகான், அடுத்தடுத்து மூன்று கைச்சிளோட்டப் பந்தயங்களில் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். நோர்வேயில் நடைபெற்ற சைக்கிளோட்ட சம்பியன்சிப் போட்டியில் சகான் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்த வெற்றியை நம்ப முடியவில்லை எனவும் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் சகான் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக நான்கு பேர் மட்டுமே, உலக சம்பியன்சிப் பட்டங்களை மூன்று தடவை வென்றெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love