குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உகண்டா பாராளுமன்றில் இரண்டாவது நாளாகவும் கைகலப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஜனாதிபதியின் வயதெல்லை தொடர்பிலான விவாதத்தின் போது கைகலப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது. நீண்ட நாட்களாக ஆட்சி நடத்தி வரும் ஜனாதிபதி யுவேரி முசவெனி ( Yoweri Museveni ) 75ம் வயதில் மீளவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள முயற்சிக்கப்படுகின்றது.
இதற்கு ஆதரவான ஒரு தரப்பிற்கும் எதிரான மற்றுமொரு தரப்பிற்கும் இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாற்றமடைந்துள்ளது. ஒலி வாங்கிகளை வீசியும், நாற்காலிகளை வீசியும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி மீளவும் ஆட்சியில் அமர்வதற்காக அரசியல் சாசனத்தில் திருத்தங்களை செய்வதற்கு அனுமதிக்க முடியாது என 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.