குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மனஸ்தீவு முகாமிலிருந்து அமெரிக்காவிற்கு சென்றுள்ள அகதிகளை அவுஸ்திரேலிய குடிவரவு துறை அமைச்சர் பீட்டன் டட்டன் பொருளாதார அகதிகள் என வர்ணித்துள்ளார். வானொலியொன்றிற்கு வழங்கி பேட்டியிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர்கள் பொருளாதார அகதிகள் எனவும் அவர்கள் ஆட்கடத்தல்காரர்களிற்கு பெருமளவு பணம் வழங்கி படகுகளில் புறப்பட்டவர்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மனஸ்தீவு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பலர் யுத்தத்தில் சிக்கியுள்ள நாடுகளில் இருந்து வரவில்லை எனவும் மாறாக அவர்கள் பொருளாதார நோக்கம் கொண்டவர்கள் எனவும் குடிவரவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக அவர்கள் அவுஸ்திரேலிய மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தியுள்ளனர் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அகதிகளும் புகலிடக்கோரிக்கையாளர்களும் தடுத்துவைக்கப்பட்டுள்ள முகாம்களின் நிலை வெளி உலகிற்கு சித்தரிக்கப்படுவது போன்று மோசமானதாகயில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.