குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
அக்கரை கடற்கரையை சுற்றுலா மையமாக மாற்ற வேண்டாம் என கோரி நடாத்தப்படும் போராட்டத்திற்கு செல்லாத மக்களை இராணுவத்தினர் அச்சுறுத்துகின்றார்கள் என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் அ. பரம்சோதி தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் 106ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன்போது, அக்கரை கடற்கரையை சுற்றுலா மையமாக மாற்றவே ண்டாம். என கோரி மக்கள் போராட்டம் நடத்திவருவது தொடர்பாக மாகாணசபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன் விசேட கவனயீர்ப்பு ஒன்றை சபைக்கு சமர்பித்திருந்தார்.
அது தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சர் தெரிவிக்கையில்,
அக்கரை கடற்பகுதியை சுற்றுலா தளமாக மாற்றவேண்டாம் என கூறி உணவு தவிர்ப்பு போராட்டத்தினை நடத்திவரும் பெண் இராணுவத்துடன் மிக நெருங்கிய தொடர்பினை கொண்டவர் என்பது எனக்கு தெரியும்.
அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டம் கூட பலாலியில் கொண்டாடப்பட்டு ள்ளது. அதனாலேயே போராட்டம் நடத்தப்படும் இடத்தில் பல புலனாய்வாளர்கள் நின்று கொண்டிருக் கின்றார்கள் என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் ஆ.பரஞ்சோதி , அக்கரை கிராமத்தில் வாழும் பல மக்களுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. அதன் ஊடாக நான் அறிந்து கொண்டது என்னவெனில் அந்த போராட்டத்திற்கு வராத மக்கள் இராணுவத்தால் அச்சுறுத்தப்படுகின்றார்கள். என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த, மகளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசி தரன் , அக்கரை கடற்கரையை சிறுவர் பூங்காவாக மாற்றுவது உடனடியாக சாத்தியப்படக் கூடிய விடயம் அல்ல. அதில் பல நிர்வாக விடயங்கள் உள்ளடங்கி உள்ளது.
எனவே உடனடியாக செய்ய முடியாத விடயத்திற்கு சாகும்வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடத்துவது பொருத்தமற் ற விடயம் என கூறியதுடன் போராட்டம் நடைபெறும் இடத்தில் அளவுக்கு அதிகமான புலனாய்வாளர்கள் நிற்பதாக தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து தொடர்ந்து கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன் , அக்கரை கடற்கரையில் பல கலாச்சார பிறழ்வுகள் நடந்து கொண்டிருப்பபதனை நான் நேரில் அவதானித்து உள்ளேன் என தெரிவித்தார்.
அதனை அடுத்து குறித்த விசேட பிரேரணை முதலமைச்சரின் கவனத்திற்கு அனுப்பிவைக்கப்படும். என அவைத்தலைவர் தெரிவித்தார்.