குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது அர்த்தமற்றது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி டராம்ப் தனது நாட்டு ராஜாங்கச் செயலாளருக்கு இதனைத் தெரிவித்துள்ளார். வடகொரியாவுடன் அணுத் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதில் எவ்வித பயனும் கிடையாது என குறிப்பிட்டுள்ள அவர் வடகொரியா பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் மிகவும் சொற்பளவிலான ஆர்வத்தையே வெளிக்காட்டுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ரெக்ஸ் ரில்லர்சன் ( Rex Tillerson ) க்கு அவர் இவ்வாறு ஆலேசானை வழங்கியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான முரண்பாட்டு நிலைமை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.