Home இலங்கையாழில் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திறகு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கிலும் போராட்டம்

யாழில் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திறகு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கிலும் போராட்டம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழில் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு  எதிர்ப்புத் தெரிவித்து கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்களும்  இன்று  ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுள்ளனர்.

காலை 10.30 மணியளவில் நிறுவகத்தின் முன்பாக  கூடிய  மாணவர்கள் மாணவர்களின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான பல்வேறு பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கொலை தொடர்பில் நீதியான விசாரணை நடைபெற வேண்டும் எனவும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த கால யுத்தம் காரணமாக பெரும்  இன்னல்கள் மத்தியில் கல்வியை தொடர்ந்து பல்கலைக்கழகம் வரை செல்லும் மாணவர்கள் மீது இவ்வாறான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More