குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சியின் பரந்தனுக்கும் முல்லைத்தீவின் திருமுறிகண்டிக்கும் இடையில் நடைபெறுகின்ற மினிபஸ் சேவைகளை ஆனையிறவு வரை நடாத்துமாறு உமையாள்புரம், ஆனையிறவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக தமது கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் ஏ-9 சாலையில் பயணிக்கின்ற பேரூந்துகள் பரந்தன் இந்து மகா வித்தியாலயம், கிளி புனித திரேசா பெண்கள் கல்லூரி, கிளிநொச்சி மகா வித்தியாலயம், கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம், கிளி முருகானந்தாக் கல்லூரி என்பவற்றிற்குச் செல்லும் மாணவர்களை ஏற்றுவதில்லை எனவும் இது தொடர்பாக பிரதேச, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பல தடவைகள் சுட்டிக் காட்டப்பட்ட போதிலும் பேரூந்துகள் மாணவர்களை ஏற்றாத நிலைமை காணப்படுகின்றது.
இந்நிலையில் பரந்தனில் காத்து நிற்கும் மினிபஸ்கள் ஆனையிறவு வரை சேவையில் ஈடுபடுவதன் மூலம் மேற்படி கிராமங்களைச் சேர்ந்த மக்களும் மாணவர்களும் கிளிநொச்சி நகரத்திற்கான போக்குவரத்தில் ஈடுபட முடியும். இதற்கு நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும். மினிபஸ் சேவைகள் நடாத்த முடியாவிட்டால் கிளிநொச்சி நகரில் இருந்து ஆனையிறவு வரை இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்தினை மாணவர்களின் போக்குவரத்து நன்மை கருதி நடாத்த வேண்டும் என பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர