Home இந்தியாராஜீவ் காந்தி கொலை வழக்கு சந்தேகநபர்களின் வழக்கு ஒத்திவைப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கு சந்தேகநபர்களின் வழக்கு ஒத்திவைப்பு

by admin


இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ரொபேர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் தம்மை  விடுவிக்குமாறு  கோரிய வழக்கின் விசாரணையை அடுத்த மாதம்   7ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரொபேர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் தமமை விடுவிக்குமாறு கோரி கடந்த 2012-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றில்  வழக்கு தொடர்ந்திருந்தனர்.

குறித்த வழக்கு நேற்றையதினம்   விசாரணைக்கு வந்த நிலையில்  அரசு சார்பில் முன்னலையான சட்டத்தரணி;, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றில்  நிலுவையில் உள்ளதால் இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதைதொடர்ந்து வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More