மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்து இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் நகரத்தின் கவுன்சிலினால் ஆன்சாங் சூகிக்கு வழங்கப்பட்ட பிரீடம் ஒப் ஒக்ஸ் போர்ட் (freedom of oxford) பட்டம் மீளப் பெறப்பட்டுள்ளது.
மியான்மரில் ஜனநாயக உரிமைகளுக்காக அவர் நடத்திய போராட்டத்தை அங்கீகரித்து இங்கிலாந்தின் உலக பிரசித்தி பெற்ற ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அமைந்துள்ள ஒக்ஸ்போர்டு நகர கவுன்சில் அவருக்கு பிரீடம் ஒப் ஒக்ஸ் போர்ட் எ;கின்ற கௌரவத்தினை வழங்கியிருந்தது.
எனினும் தற்போது அவர் ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் விவகாரம் தொடர்பில் செயற்படும் விதம் குறித்து அதிருப்தியடைந்துள்ளமையினாலேயே அவருக்கு வழங்கப்பட்ட கௌரவம் மீளப்பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகையதொரு நடவடிக்கையை ஒக்ஸ்போர்ட் நகர கவுன்சில், மேற்கொண்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.