குளோபல் தமிழ் செய்தியாளர்
படையினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக தாம் ஒரு போதும் கூறவில்லை என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அண்மையில் வடக்கிற்கு சென்றிருந்த போது படையினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக தாம் கூறியதாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்தது எனவும் எனினும் தாம் அவ்வாறான ஓர் குற்றச்சாட்டை சுமத்தவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்தவொரு படைவீரரேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் சட்ட ரீதியாக அந்த விடயம் அணுகப்பட வேண்டுமென தாம் கோரியதாகத் தெரிவித்துள்ளார். படையினர் குற்றச் செயல்களில் ஈடுபட்டார்கள் என தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒப்புக்கொள்ளவில்லை என பசில் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.