இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்தும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜீன ரனதுங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரில் தினேஸ் குணவர்ந்த எழுப்பிய கேள்வியின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த நிறுவனம் எங்கள் நாட்டினுடைய அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்பு செலுத்தும் நிறுவனம் என்பதுடன் தேசிய சக்தி வளங்களை பாதுகாக்கும் முக்கிய பொறுப்புவாய்ந்த அமைப்பாக காணப்படுகின்றது. தான் மட்டுமல்ல இந்த அரசாங்கமும் முழுநாட்டு மக்களுக்கும் இந்நிறுவனத்தை பலமிக்க நிறுவனமாக மற்றுவது தொடர்பாக பொறுப்பு காணப்படுகின்றது எனத் தெரிவித்த அவர் தான் இது தொடர்பாக உறுதியுடன் உள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசாங்கம் எரிபொருள் விலை அதிகரிப்பது தொடர்பாக எவ்வித முடிவையும் இதுவரை எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளர்h. எமது நாட்டில் ஜனவரி 22, 2015 முதல் எரிபொருள் விலை பெரிதும் குறைக்கப்பட்டு அரசாங்கத்தின் இலக்கை அடைய முடிந்தது.