சர்ச்சைக்குரிய கோத்ரா வன்செயல் குறத்தில் ஈடுபட்டவர்களின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 11 பேருக்கான தண்டணையை ஆயுள் தண்டணையாக குறைத்து குஜராத் மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதேவேளை கடந்த சில நாட்களின் முன்னர் குறித்த மதக்கலவரங்களில் மோடி குற்றவாளி இல்லை என்று அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
2002ஆம் ஆண்டு பெப்ரவரி 27ஆம் திகதி கோத்ரா புகையிரத நிலையத்தில் சபர்மதி விரைவுப் புகையிரம் மத வன்முறையாளர்களால் எரியூட்டப்பட்டது. இதன்போது அதில் பயணித்த 60 முஸ்லீம்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து குஜராத் மாநிலம் முழுவதும் வன்முறைகள் இடம்பெற்றிருந்தன.
இது தொடர்பான வழக்கில், குஜராத் விசாரணை நீதிமன்றம் 31 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது. அவர்களில் 11 பேருக்கு மரண தண்டனையும் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.
குறித்த தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட மேல்முறையீடு இன்று நீதிபதிகள் ஏ.எஸ்.தவே, ஜிஆர்.உத்வானி, விசாரணைக்கு வந்த வேளை மனுவை விசாரித்த 11 பேருக்கான மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டனர்.
இதேவேளை ஏற்கெனவே 20 பேருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையைநீதிபதிகள் உறுதி செய்தனர். குறித்த வன்முறை இடம்பெற்ற சமயத்தில் சட்டம் ஒழுங்கை பேணத் தவறிய மாநில அரசும் புகையிரத நிர்வாகமும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாவை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டப்பட்டது.