Home இலங்கைஹம்பாந்தோட்டை தாக்குதல் சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரியிடம் விசாரணை

ஹம்பாந்தோட்டை தாக்குதல் சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரியிடம் விசாரணை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஹம்பாந்தோட்டை தாக்குதல் சம்பவம் தொடர்பில் காவல்துறை அதிகாரியிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மத்தள விமான நிலையத்தை வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு விடுவதனை எதிர்த்து அண்மையில் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்தின் போது துணை காவல்துறை அத்தியட்சகர் ஒருவர், போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர் ஒருவரை தாக்கியிருந்தார். இந்த தாக்குதல் சம்பவம் சமூக ஊடக வலைமையப்புக்களில் வெளியிடப்படடிருந்தது. துணைக் காவல்துறை அத்தியட்சகர் தலுவத்த என்பவரின் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. காலி பிரதிக் காவல்துறை மா அதிபர் சந்தன அலகக்கோன் தலைமையில் சம்பவம் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More