Home இலங்கைஇலங்கைக்கு இராணுவ ரீதியான உதவிகள் வழங்கப்படும் – அமெரிக்கா

இலங்கைக்கு இராணுவ ரீதியான உதவிகள் வழங்கப்படும் – அமெரிக்கா

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கைக்கு இராணுவ ரீதியான உதவிகள் வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ஆசிய பசுபிக் பிராந்திய வலயத்திற்கான கட்டளைத் தளபதி அட்மிரால் ஸ்கொட் சிப்ட் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் வெள்ளம் ஏற்பட்ட அமெரிக்கப் படையினர் உதவிகளை வழங்கியிருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடற்கொள்ளை உள்ளிட்ட பல்வேறு ஆபத்துக்களுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More