குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான ஏற்பாடுகளிற்கான செலவீனங்கள் குறித்து நிதியமைச்சர் பிலிப் ஹமொன்ட் அடுத்த மாத வரவுசெலவு திட்டத்திற்கு முன்னர் அறிக்கையொன்றை வெளியிடுவார். முன்னாள் கொன்சவேர்ட்டிவ் தலைவர் இயன் டன்கன் ஸ்மித்தின் கேள்விக்கு பதில் அளிக்கையில் தெரேசா மே இதனை தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறும் நடவடிக்கைகளிற்காக 250 மில்லியன் ஸ்டேர்லிங் பவுன்ட் நிதி ஓதுக்கீடு செய்யப்படும் பிரதமர் தெரிவித்துள்ளார். நிதியை எந்த விடயங்களிற்காக செலவு செய்யவேண்டுமோ அந்த விடயங்களிற்காக செலவிடுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளிற்காக நிதியை செலவுசெய்யவேண்டியிருக்கும் என குறிப்பிடடுள்ள நிதியமைச்சர் ஐரோப்பிய ஓன்றியத்துடன் உடன்படிக்கை ஏற்படாது என தற்போதைக்கு கருதவேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.