குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பயங்கரவாத சதித்திட்டங்களில் ஈடுபட்டவர்களிற்கு கடுமையான தண்டனை விதிப்பது குறித்து பிரித்தானியா ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கார்கள் கத்திகள் போன்றவற்றை பயன்படுத்தி தாக்குதல்களை மேற்கொள்பவர்களிற்கு தற்போது விதிக்கப்படுகின்ற தண்டனைகள் கடுமையானவையல்ல என்ற கருத்து நிலவுவதை தொடர்ந்தே பிரித்தானியா இது குறித்து ஆராய்ந்து வருகின்றது.
தற்போது இவ்வாறான சதிமுயற்சிகளில் ஈடுபடுபவர்களிற்கு 21 மாதம் முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படுகின்றது. இதனை மூன்று வருடங்கள் முதல் ஆறுவருடங்களாக்குவது குறித்து பிரித்தானியா ஆராய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சதிதிட்டங்களில் ஈடுபட்டவர்களிற்கு உதவியவர்களிற்கு கடுமையான தண்டனையை விதிப்பது குறித்தும் அதிகாரிகள் ஆராய்ந்துவருகின்றனர்.