குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பின்னர், வன்முறையை தூண்டிவிட்டதாக அவரது வளர்ப்பு மகளான ஹனிபிரீத் ஒப்புக் கொண்டுள்ளார் என சிறப்பு விசாரணை குழு தெரிவித்துள்ளது.
தேரா சச்சா சவுதா ஆசிரமத்தின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், 2 பெண் துறவிகளைப் பலாத்காரம் செய்ததாக முறையிடப்பட்டதனை தொடர்ந்து அவரை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்ததனையடுத்து ஏற்பட்ட வன்முறைகளில் 35 பேர் உயிரிழந்தனர்.
இந்த வன்முறை சம்பவங்களுக்கு பின்னணியில் குர்மீத்தின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் மற்றும் ஆசிரமத்தின் நிர்வாகிகள் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த ஹனிபிரீத்தை கடந்த வாரம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான வழக்கு நேற்றையதினம் கு பஞ்ச்குலா சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வன்முறையை தூண்டி விட்டதாக விசாரணையின் போது ஹனிபிரீத் ஒப்புக் கொண்டுள்ளார் எனவும் குர்மீத் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பின்னர் ஹரியாணாவின் பல பகுதிகளில் கூடியிருந்த வன்முறையாளர்கள் பலருக்கு வீடியோ கிளிப்ஸ்கள் அனுப்பி வன்முறையில் ஈடுபட ஹனிபிரீத் தூண்டி விட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்
அத்துடன், ஹனிபிரீத்தின் நண்பர் குல்தீப்பும் வன்முறையை தூண்டியதாக ஒப்புக் கொண்டுள்ளார் எனவும் வன்முறையில் ஈடுபட 1.25 கோடி ரூபாயை ஹனிபிரீத் விநியோகித்தார் எனவும் அவரது வாகன ஓட்டுனர் ராகேஷ் குமார் கூறியுள்ளதாகவும் நீதிம்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.