Home இலங்கைபிள்ளைகள் கணவனை விட்டு வேறு ஆணுடன் சென்ற பெண் விளக்கமறியலில்

பிள்ளைகள் கணவனை விட்டு வேறு ஆணுடன் சென்ற பெண் விளக்கமறியலில்

by admin
மூன்று பிள்ளைகளையும் கணவனையும் விட்டு பிரிந்து வேறு ஒரு ஆணுடன் தங்கியிருந்த 29 வயதுடைய பெண்ணொருவரை எதிர்வரும் 03ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியை சேர்ந்த 04 , 06 மற்றும் 10 வயதுடைய மூன்று பிள்ளைகளையும் , கணவனையும் விட்டு பிரிந்து , வேறு ஒரு ஆணுடன் கீரிமலை பகுதியில் அப்பெண் வசித்து வந்துள்ளார்.
அது தொடர்பில் பெண்ணின் கணவரால் சாவகச்சேரி  காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , காவல்துறையினர் அப்பெண்ணை கைது செய்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் முற்படுத்தினர்.  அதனை அடுத்து அப்பெண்ணை எதிர்வரும் வரும் 03ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More