144
அமெரிக்காவின் டெக்சாஸ்சில் இடம்பெற்ற அமெரிக்க கிராண்ட்பிரி கார் பந்தயப் போட்டியில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹமில்டன் முதலிடத்தை பெற்றுள்ளார். இதில் 22 வீரர்கள் கலந்து கொண்ட் 308.405 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹமில்டன் சக அணி வீரரான ஜேர்மினயைச் சேர்ந்த நிகோ ரோஸ்பர்க்கை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.
பார்முலா 1 போட்டியில் ஹமில்டன் பெற்ற 50-வது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது. பார்முலா 1 கார் பந்தயத்தின் 19-வது சுற்றான மெக்சிகோ கிராண்ட்பிரி போட்டி எதிர்வரும் 30ம் திகதி இடம்பெறவுள்ளது.
Spread the love