கிளிநொச்சி கால்நடை வைத்திய திணைக்களத்தின் விலங்கு புலனாய்வு நிலையம் இன்று(13) கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கால்நடை வைத்திய திணைக்களத்தின் விலங்கு புலனாய்வு நிலையம் இன்று(11) கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.
மத்திய கால் நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் 32 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட மாவட்ட புலனாய்வு நிலையம் கிளிநொச்சி நகரில் கணேசபுரத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ரி.ஹரிசன் கலந்துகொண்டு நிலையத்தை திறந்து வைததுள்ளாா்.
இந்நிகழ்வில் பணிப்பாளர் நாயகம் ஆரியதாச, பணிப்பாளர் விலங்கு சுகாதார வைத்தியர் நிமால் ஜெயவீர, மேலதிக செயலாளர் வைத்தியர் நிகால், வட மாகாண கால்நடை உற்பத்தி சுகதார திணைக்கள பணிப்பாளர் வசீகரன் மற்றும் கால்நடை வைத்தியதிணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.