விளையாட்டு

டெஸ்ட் சம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டி லீக் ஆகியவற்றுக்கு ஐசிசி ஒப்புதல் :

9நாடுகள் பங்கேற்கும் டெஸ்ட் சம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டி லீக் ஆகியவற்றுக்கு சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை ஒப்புதல் தெரிவித்துள்ளது.

டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்த 9 நாடுகளும் உள்நாட்டில் 3 டெஸ்ட் தொடர்களையும் அயல்நாட்டில் 3 தொடர்களையும் 2 ஆண்டுகள் காலக்கட்டத்தில்  விளையாடும்  என சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின்  தலைமை அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.

2019 உலகக்கோப்பை நிறைவடைந்ததன் பின்னர்  இந்த டெஸ்ட் சம்பியன்ஷிப்  ஆரம்பமாகும்  எனவும்  2021 மத்தியில் இறுதி டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டி நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகளின் ஆரம்பத்தில்   ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஆப்கான் அணிகள் பங்கேற்காது எனவும்  டேவ் ரிச்சர்ட்சன்; தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply