Home இலங்கைஜனாதிபதி செல்லவுள்ளதனை முன்னிட்டு கிளிநொச்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

ஜனாதிபதி செல்லவுள்ளதனை முன்னிட்டு கிளிநொச்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

by admin

கிளிநொச்சியில் இன்றையதினம்  ஜனாதிபதி கலந்துகொள்ளும்  நிகழ்வு இடம்பெறவுள்ள நிலையில்   பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஜனாதிபதி இருவேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ள நிலையில் பாதுகாப்பிற்காக அதிகளவான காவல்துறையினர்  வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகர் உட்பட பல பகுதிகளில்  காவல்துறையினருடன் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து  சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும்  பெரும்பாலும்  இராணுவத்தினரின் பிரசன்னம் குறைவாகவே உள்ளதாகவும்  அதிகளவில் காவல்துறையினரே பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More