எதிர்வரும் வரும் 18 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள தீபாவளியின் போது பட்டாசு விபத்து ஏற்பட்டால் மீட்புப் பணியில் ஈடுபட தமிழகம் முழுவதும் 5,500 தீயணைப்பு படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக தீயணைப்புத் துறை டிஜிபி கே.பி.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மீட்பு பணிகளுக்காக ‘வோட்டர் பவுசர்’ என்ற புதிய வகை தீயணைப்பு வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தீபாவளியின்போது, பட்டாசு விபத்து ஏற்பட்டால் விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்வது, காயம் அடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வது உள்ளிட்டவை தொடர்பாக தீயணைப்புத் துறை அதிகாரிகளுக்கு ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சென்னையில் பட்டாசு விபத்துகள் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள 700 வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் பிற மாவட்டங்களில் இருந்து கூடுதலாக 500 வீரர்கள் சென்னைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.