டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் இன்று மாத்திரம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். திருச்சி, கிருஷ்ணகிரி மற்றும் இராதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு ஒரே நாளில் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட பூசாரிகளம் பகுதியில் இரண்டரை வயதான தரணிஷ்வரன் என்ற குழந்தை கடந்த 20 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்றுஉயிரிழந்துள்ளார்.
இதேவேளை கிருஷ்ணகிரி மாவட்டம் முசிலிகுட்டை பாபா நகரை சேர்ந்த ஜான்பாஷா டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அத்துடன் ஊத்தங்கரைப் பகுதியில் இதுவரையில் 8 பேர் டெங்கு காய்ச்சலில் பலியாகியுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தின் நைனார்கோவில் ஒன்றியத்தில் உள்ள மூம்முடிச்சாத்தான் கிராமத்தை சேர்ந்த முனியம்மாள் காய்ச்சலால் சிகிச்சை பலனின்றி இன்று காலை முனியம்மாள் உயிரிழந்தார்.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. முறையான கிசிச்சைகள் வழங்கப்படாமையினாலேயே உயிரிழப்புக்கள் ஏற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் டெங்கை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக அரசு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.