குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் பழிவாங்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஐரோப்பாவின் முக்கிய மனித உரிமை நீதிமன்றத்தினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திட்டமிட்ட அடிப்படையில் வேண்டுமென்றே ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி ( Alexei Navalny ) மீது அந்நாட்டு அரசாங்கம் வழக்குத் தொடர்ந்து தண்டனை விதித்துள்ளதாக ஐரோப்பிய நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தி அலெக்ஸி நவால்னி தண்டிக்கப்பட்டிருந்தார். எதேச்சாதிகார போக்கில் சட்டவிரோதமான முறையில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், ரஸ்யா இதற்கு நட்டஈடு வழங்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.