குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன நீதிமன்றிற்கு விளக்கம் அளிக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். உயர்கல்வி அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோர் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு பக்கச்சார்பாக செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன நீதிமன்றின் முன்னிலையில் விளக்கம் அளிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சு தனது பொறுப்புக்களை மீறிச் செயற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.