குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதிர்வரும், ஜனவரி மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கில் இரண்டு பிரதேச சபைகளுக்கு புதிய முறையில் தேர்தல் நடாத்துவதற்கான சட்டமொன்றை அரசாங்கம் சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வன்னி மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் கரையோரப்பற்று ஆகிய இரண்டு உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் கடந்த 2010ம் ஆண்டு முதல் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு உள்ளுராட்சி மன்றங்களுக்கும் புதிய முறையில் தேர்தல் நடாத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.