குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் நிறைவடைய குறைந்த பட்சம் ஐந்து வருடங்களுக்கு மேலாகும் என குற்றவாளிகள் தரப்பில் மேன்முறையீடு செய்த சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகள் தரப்பில் யாழ்.மேல் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவை இன்றைய தினம் முன் வைத்த பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாய (ராயலட் பார் ) விசாரணை பதிவேடுகள் சுமார் 4ஆயிரம் பக்களைகொண்டு உள்ளன. அவற்றினை சிங்கள மொழிக்கு மொழிமாற்றம் செய்ய குறைந்த பட்சம் ஒரு வருட காலம் தேவைப்படும்.
அதன் பின்னர் பிரதம நீதியரசர் 5 நீதியமைச்சர்களை நியமித்து , அந்த நீதியமைச்சர் குழாம் குறித்த வழக்கினை முழுமையாக படிக்க வேண்டும்.
அதன் பின்னர் விசாரணைகளுக்கு திகதியிட ப்பட்ட பின்னர் , வழக்கில் ஒவ்வொரு விடயத்திலும் விடப்பட்ட தவறுகளை சுட்டிக்காட்ட முடியும். அவ்வாறாக மேன்முறையீட்டின் இறுதி முடிவு கிடைக்க குறைந்த பட்சம் 5 வருடங்களுக்கு மேலாகும் என எதிர்ப்பார்க்கிறேன் என தெரிவித்தார்.