குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கத்திற்கும் காவல்துறையினருக்கும் இடையிலான நம்பிக்கை துரித கதியில் அதிகரித்துள்ளதாக அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார். காவல்துறை உத்தியோகத்தர்களை பாராட்டும் வகையில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட காலம் வரையில் காவல்துறை சேவையில் கடமையாற்றிய உத்தியோகத்தர்கள் அதிகாரிகள் சுய விருப்பின் அடிப்படையில் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ளக்கூடிய திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சிறந்த முறையில் சேவையாற்றிய 1034 காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு 45 மில்லியன் ரூபா பரிசுத் தொகை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.