குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னோக்கி நகர்வதாக ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மேர்கல் கருத்து வெளியிட்டுள்ளார். ஐரோப்பிய ஓன்றிய உச்சி மாநாட்டின் முதலாம் நாள் முடிவில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவின் செய்தித்தாள்கள் சித்தரிக்கும் விதத்திற்கு மாறானதாக தனது உணர்வுகள் காணப்படுகின்றன எனவும் பிரித்தானியா , ஐரோப்பிய ஓன்றிய பேச்சுவார்த்தைகள் படிப்படியாக முன்னேறிச்செல்கி;ன்றன என தான் கருதுகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் அனைவரும் தீவிர கவனம் செலுத்தினால் நாங்கள் எதிர்பார்க்கும் முடிவுகள் கிடைக்கும் என்பது குறித்து தான் உறுதியாக நம்புகிறேன் எனவும் தனது தரப்பிலிருந்து இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடையும் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.